news1front

சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஸாஹிறா விஷேட பாடசாலைக்கு விஜயம்.

சமூக சேவைகள் அமைச்சினால் விஷேட பாடசாலைகளை மேற்பார்வை செய்யும் திட்டத்தின் கீழ் இன்று 14.11.2012 சமூக சேவைகள் அமைச்சு மேலதிகச் செயலாளர் M.C.L.கிறிஸ்டி பெர்னான்டோ, சைட் சேர்விஸ் தொண்டர் நிறுவனம் சார்பில் Dr.சுனில் பெர்னான்டோ ஆகியோர் வருகை தந்து காத்தான்குடி கிழக்கிலங்கை இஸ்லாமிய நலன்புரி அமைப்பினால் நடாத்தப்படுகின்ற ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகளை அவதானித்து தேவைகளையும் கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கினர். இதன்பின் இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர், மற்றும் நிர்வாக சபையின் சேவையினைப் பாராட்டினர். இதன்போது பாடசாலை சார்பில் முகைாமையாளர் M.H.A.M.இஸ்மாயில், பாடசாலை அதிபர் A.அன்வர், கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் சார்பில் தலைவர் அல்ஹாஜ் M.H.A.பஸீர் J.P, உறுப்பினர் அல்ஹாஜ் M.A.A.M.அப்துல் வதூத் J.P, விடுதி முகாமையாளர் M.A.மஹ்றூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags: No tags

1,646 Responses

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *